#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பையே மிஞ்சிய இளைஞரின் துணிகர செயல்... 70 வயது மூதாட்டிக்கு நடந்தது என்ன.?
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதம்மாள்(70). இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் யசோதம்மாள் மட்டும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னிடம் இருக்கும் பணத்தை உறவினர்கள் சிலரிடம் வட்டிக்கு விட்டு வந்துள்ளார். அவ்வாறு தனது பங்காளி முறையான வெங்கடேசன் என்பவருக்கு வட்டிக்கு விட்டுள்ளார். வெங்கடேசனுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலை இருவருமே போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தூங்குவதற்காக சென்ற யசோதாம்மாள் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே வராததை அடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள புதருக்கு நடுவில் யசோதாம்மாள் தலை சிதைந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் வெங்கடேசனின் இரண்டாவது மகன் சதிஷ் யசோதாம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலையில் அம்மி கல்லை போட்டு முகத்தை சிதைத்த நிலையில் புதரில் போட்டதும் தெரிய வந்துள்ளது. உடனே போலீசார் சதிஷை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் யசோதாம்மாளிடம் சதிஷ் குடும்பத்தார் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். அவர்களின் மூதாட்டி வட்டி கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதிஷ் மூதாட்டியை கொலை செய்ததாக கூறியுள்ளார். இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.