திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நூதன முறையில் நடந்தேறிய கடத்தல்! 700 கிலோ குட்கா பறிமுதல்!!
பெங்களூரில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்த வேன் ஒன்றை உணவு பாதுகாப்பு துறையினர் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்த வேனில் தக்காளி பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின் வாகனத்தை முழுவதும் சோதனை செய்த அதிகாரிகள் ஏராளமான பான்பராக் குட்கா போன்றவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தக்காளி பெட்டிகளுக்கு இடையே 700 கிலோ பான்பராக் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 14 லட்சம் ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் லாரியை ஒட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை பெற்றுக்கொண்டனர். பின்னர், சம்பந்தப்பட்ட வேன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.