திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
7மாத கருவை கலைக்க மாத்திரை போட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்.!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வீரமணி- ரமணா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ரமணா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான ரமணா மூன்றாவது குழந்தையை கலைக்க முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கருவை கலைக்க மருந்து கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் கர்ப்பிணியான ரமணாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே மாத்திரை சாப்பிடுவதில் அதிக வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளது.
அதன் பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது வயிற்றிலிருந்து குழந்தை அகற்றப்பட்ட நிலையில் ரத்தப்போக்கு நிற்கவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி, தேவி, வெற்றி செல்வி ஆகியோரை கைது செய்துள்ளனர்.