மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விளையாடி கொண்டிருக்கும் போது மயக்கமான 8 வயது சிறுவன்... மருத்துவமனையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
மயிலாடுதுறை நடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் ஹரிஷ்(8). ஹரிஷ் கடந்த 30 ஆம் தேதி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு அருகில் விளையாடியுள்ளான். விளையாடி கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார் ஹரிஷ்.
உடனே சிறுவனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கபடாததால் சிறுவனை அழைத்து கொண்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனை பாம்பு கடித்திருப்பதாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அதனையடுத்து சிறுவனின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் லலிதா இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.