திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா! தொற்று பரவியது எப்படி?
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள இல்லோடு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் உள்ள கார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த நபருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது குடும்பத்தில் உள்ள 9 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,243 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.