"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ஆடு மேய்க்கச்சென்று மாயமான சிறுமி! இருநாட்களுக்கு பிறகு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் சம்பவம்!
விருதுநகர் மாவட்டம் வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பச்சாமி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு வசந்த குருலட்சுமி என்ற 9 வயது மகள் உள்ளார். அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது சகோதரியுடன் ஆடுகளை விரட்டி கொண்டு தனது வீட்டிற்கு அருகேயுள்ள பகுதியில் மேய்க்க சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் குருலட்சுமியின் தங்கை மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் பதறியடித்துக் கொண்டு வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில் கருப்புசாமி மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து இரு நாட்களுக்கு பின்பு இன்று வீட்டின் அருகே உள்ள கிணறு ஒன்றில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சிறுமியின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.