மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செங்கல்பட்டில் பேரதிர்ச்சி சம்பவம்.. 9ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி.!
இரண்டாவது மாடிக்கு சென்ற மாணவி திடீரென கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவி கஜ சுபமித்ரா என்பவர் படித்து வருகிறார். இன்று அவர் பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்ற நிலையில், திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வரும் நிலையில், மாணவியின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலை தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.