தந்தை திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை...!



A 10th class student hanged himself after his father scolded him

தந்தை திட்டியதால் ஏற்பட்ட விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அருகில் சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் முருகன். இவர், ரோட்டுக் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சுதீப் (15). அந்த பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில்10-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே உண்டான தகராறில், அவருடைய மனைவி, தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எனவே வீட்டில், முருகனும், அவரது மகனும் மட்டும் இருந்தனர். முருகனும் வேலைக்கு போகாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். 

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு தாமதமாக வந்த மகன் சுதீப்பிடம், நன்றாக படிக்காததால் நான் பரோட்டா மாஸ்டராக வேலை செய்கிறேன். நீயாவது நன்றாக படித்து முன்னுக்கு வா. கண்டபடி ஊர் சுற்றாதே என்று சொல்லி மகனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுதீப், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நீண்டநேரம் ஆகியும் மகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு தனது மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.