திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவசர ஊர்தியிலேயே 24 வயது இளம்பெண்ணுக்கு பிரசவம்; அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்மணி.!
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகிய குழந்தையை பெண்மணி பெற்றெடுத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அர்த்தனாரிபாளையம் பகுதியில் தேங்காய் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் தில்லையேஸ்வரன். இவரின் மனைவி ஷோபனா (வயது 24).
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷோபனாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்படவே, அவசர ஊர்தியின் மூலமாக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷோபனாவுக்கு அவசர ஊர்தியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, தாயும்-சேயும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.