திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவன் இறந்த சோகம் தாங்காமல் 5 மாத கர்ப்பிணி தனது குழந்தையுடன் தற்கொலை.. மதுரையில் சோகம்..!
மதுரை தனக்கன்குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் விவேக் - ஷாலினி தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் விசாக என்ற மகள் உள்ள நிலையில் ஷாலினி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்களது மகள் விசாகாவிற்கு இரண்டாவது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடியுள்ளனர். அப்போது அன்று இரவே விவேக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது.
இதனைத் தொடர்ந்து விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் இறந்த சோகத்தில் இருந்த ஷாலினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது மகள் விசாகாவை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஷாலினியின் உடலை கைப்பற்றியும், மேலும் குழந்தை விசாகாவின் உடலை தேடியும் வருகின்றனர். இந்நிலையில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் கர்ப்பிணி தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது