ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி.. அதிரடியாக கைது செய்த போலீசார்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளியான குமார். இவர் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஆசை வார்த்தை கூறி பாலியல் தீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் வீடு திரும்பிய அந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர்.
மேலும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கூலித் தொழிலாளியான குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.