ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
லிஃப்ட் கேட்ட சிறுவனிடம்.... சீண்டலில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்.! விசாரித்த போது மக்கள்.!
லிப்ட் கேட்டு சென்ற பள்ளி சிறுவனிடம் பாஜகவை சார்ந்தவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை செய்யும் வீடியோ ஒன்றும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சார்ந்த சிறுவன் ஒருவன் சிவன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் அழுது கொண்டே சென்றிருக்கிறான் . இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த சிறுவனிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுவனை ஏற்றிக் கொண்டு வந்த நபர் அந்த சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது .
இதனைத் தொடர்ந்து அந்த நபரை விசாரித்த போது அவர் பாஜகவை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதிலிருந்து பாஜக கொடி மற்றும் அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பொதுமக்கள் கைப்பற்றினார். அந்த அடையாள அட்டையில் அம்பத்தூர் பகுதி பாஜக வலிமைப்படுத்தும் இயக்கம் என்றும் அதில் இவரது பெயர் பாலகிருஷ்ணன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிறுவனிடம் கேட்டதில் அவன் வில்லிவாக்கம் பள்ளியில் படித்து வருவதாகவும் இவரிடம் லிப்ட் கேட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளான். தான் சொன்ன இடத்தில் தன்னை இறக்கி விடாமல் அந்த பாஜக நபர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த சிறுவன் குற்றம் சாட்டினான். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் பாஜகவில் இருப்பவர்களுக்கு இதுதான் வேலையா என ஒருமையில் அந்த நபரை திட்டினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.