மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் சேலையில் தூளி கட்டி விளையாடி சிறுவனுக்கு நொடியில் நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள மாரம்பாடி நந்திகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சோப்பு கம்பெனி ஒன்றில் ஊழியளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவதினத்தன்று சேவியர் தனது இளைய மகனை அழைத்து கொண்டு வெளியூர் நிகழ்வு ஒன்றிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலில் தனிமையில் இருந்த மூத்த மகன் லெனின் விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளார்.
அதன்படி தனது தாயின் சேலையை எடுத்து கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூளி கட்டி விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலை லெனின் கழுத்து சேலையில் மாட்டிகொண்டுள்ளது. இதில் லெனின் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாலை வீடு திரும்பிய சேவியர் தனது மகனை காணாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அங்கு லெனின் மூச்சு பேச்சு இன்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சேவியர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு லெனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்