மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென பிரேக் அடித்த ஓட்டுநர்; தலையில் படுகாயமடைந்து துள்ளத்துடிக்க உயிரைவிட நடத்துனர்.!
சென்னை, பூந்தமல்லி அருகே... தனியார் பேருந்து ஓட்டுநர் அடித்த திடீர் பிரேக்கால், பேருந்துக்குள் இருந்த நடத்துநர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் வசித்து வருபவர் முருகன் (வயது 50). இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பூந்தமல்லி - காஞ்சிபுரம் வழித்தடத்தில் பணியில் இருந்துள்ளார்.
இந்த பேருந்தின் ஓட்டுநராக சகாதேவன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். பேருந்தை இயக்கிய சகாதேவன், நசரத்பேட்டை பகுதியில் திடீரென வாகனத்தை சடன் பிரேக் கொடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனால் முன்பக்க வாசலில் இருந்த முருகன், தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். இதனால் இரத்தம் வெளியேறி நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.