மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி.. சக மாணவிகளை பலியாக்கிய பரிதாபம்...!!
கூட படிக்கும் சக மாணவிகளை பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரகாஷ் என்பவர் லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. பிரகாஷின் காதலியான புதுவை சிவராந்தகம்பேட்டை பகுதியில் வசிக்கும் ஜெயபிரதா என்ற 19 வயது இளம்பெண்ணுடன் சேர்ந்து பாலியல் தொழிலை நடத்தி வந்தததை கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் ஜெயபிரதாவை கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்தாஸ் என்ற வாலிபர் விபச்சார தொழிலுக்கு பல்வேறு உதவி செய்ததாக கைது செய்தனர். ஜெயபிரதா சென்னையை சேர்ந்த காதலன் பிரகாஷ் என்பவரை நம்பி வந்து பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். காவல்துறையினரிடம் பிடிபட்டதும் ஜெயபிரதா தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாப்பாடு கொடுக்க வந்தேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.
காவல்துறையினர் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அப்போது ஜி.பே.மூலம் பலர் பணம் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. காதலி ஜெயபிரதா காவல்துறையினரிடம் சிக்கிய நிலையில் பிரகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். கல்லூரியில் படித்து கொண்டே சக மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.