தேர்வு அறையில் செல்போன்... பிடுங்கி வைத்துக் கொண்ட தேர்வு கண்காணிப்பாளர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.!



a-college-student-took-a-tragic-decision-because-the-in

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில்  இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவியிடம்  தேர்வு கண்காணிப்பாளர் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாளையங்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மகள் ஸ்ரீகவி வயது 22. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம்  நடைபெற்ற தேர்வுக்காக கல்லூரிக்கு சென்று இருக்கிறார் ஸ்ரீ கவி.

tamilnadu

அப்போது  ஞாபகம் இல்லாமல் தனது செல்போனை தேர்வு அறைக்குள் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனை கவனித்த தேர்வு கண்காணிப்பாளர் அவரிடமிருந்து செல்போனை பறித்ததோடு பெற்றோரை அழைத்து வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். மேலும் 15 நாட்கள் கழித்து செல்போனை வாங்கிக் கொள்ளவும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் மாணவி ஸ்ரீ கவி.

இந்நிலையில்  தனது வீட்டிற்கு வந்த அவர்  துவைத்த துணிகளை கொண்டு காயப்படும்படி தாயிடம் கூறியுள்ளார். அவரது தாயும் துணிகளை காய போட்டுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மாணவி ஸ்ரீ கவி அவரது அறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம்  காங்கேயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.