மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொடுமைப்படுத்திய கல்லூரி மாணவன்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு 17 வயதுடைய கல்லூரி மாணவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவன் அந்த சிறுமியை தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளான். இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரி மாணவன் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுமி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீது புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தக் கல்லூரி மாணவன் சிறுமியை விதிகளை மீறி திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்தக் கல்லூரி மாணவனை கைது செய்து கோவையில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.