திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கொடூர கணவன்.. கடலூரில் பதறவைக்கும் சோகம்.!
மதுபோதைக்கு அடிமையான கணவனால் மனைவியின் உயிர் மருத்துவமனையில் ஊசலாடும் சோனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ஏழுமேடு அகரம் கிராமத்தைச் சார்ந்தவர் மணிவண்ணன். இவரின் மனைவி விஜயகுமாரி. கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், மணிவண்ணன் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் மதுபானம் அருந்திவிட்டு, மனைவி விஜயகுமாரியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நேற்று மதுபானம் அருந்தி மணிவண்ணன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்த சம்பவத்தின் போது வாக்குவாதம் ஏற்படவே, இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மணிவண்ணன், தனது கையில் வைத்திருந்த பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர். மேலும், விஜயகுமாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.