மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரு பெண்களுக்குள் நடந்த தகராறு; பெண்ணை அடித்து கிணற்றில் தள்ளிய கொடூர பெண்..!!
கரூர் அருகே இரு பெண்களுக்கு இடையே நடந்த தகராறில் பெண்ணை களைக்கொத்தியால் அடித்துக்கொலை செய்த, மற்றொரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகில் உள்ள பில்லுர் பெரியவீட்டுக்காரன்பட்டியில் வசித்து வருபவர் முத்துசாமி. இவர் ஒரு விவசாயி. முத்துசாமியின் மனைவி வசந்தா (39). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவரது மனைவி சரோஜாவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று கலை வசந்தா கிராமத்தில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. எனவே கணவர் முத்துசாமி வயலுக்கு சென்று பார்த்தபோது வயலில் இருக்கும் கிணற்றில் வசந்தா தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்தாவின் கணவர் முத்துசாமி, தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். உடனே அங்கு வந்த காவல்துறையினர் வசந்தாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் சரோஜாவிடம் விசாரணை நடத்தினர்.
அதில், வசந்தா வயலில் இருந்தபோது சரோஜா அங்கு சென்றுள்ளார் அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரோஜா, அவர் கையில் வைத்திருந்த களைக்கொத்தியால் வசந்தாவை அடித்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த வசந்தாவை, சரோஜா கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் சரோஜாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.