பகீர்.. பெண் அலுவலரை அறைக்குள் பூட்டி பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவர்; தனியார் மருத்துவமனையில் பேரதிர்ச்சி.!!



A doctor who attempt rape hospital staff

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் புற நோயாளிகள் பாதுகாப்பு அலுவலராக பெண் பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று பெண்மணி பணியில் இருந்த நிலையில், மருத்துவர் அந்த பெண்மணி இருந்த அறையை பூட்டிவிட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். பெண் அலுவலர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மருத்துவர் அவரை தாக்கியிருக்கிறார்.

Rape

பின்னர் அங்கிருந்து லாபகமாக பெண்மணி தப்பி வந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் பலனில்லை. இதனால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, நீதிபதி விசாரணை நடத்த உத்தரவிட்டதன் பேரில் தற்போது அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.