திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தலைக்கேறிய மது போதை.. நடுரோட்டில் காரை நிறுத்தி உறங்கிய போதை ஆசாமி..!
சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போதையின் காரணமாக சாலையின் நடுவே காரை நிறுத்தி வைத்து விட்டு உறங்கிய போதை ஆசாமியால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் சாலையின் நடுவே நிறுத்தப்பட்ட சொகுசு காரானது நீண்ட நேரமாக அங்கேயே இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து காரின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த போதை ஆசாமியை எழுப்ப முயன்றும் அவர்களால் முடியாமல் போனது.
பின்னர் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து போதை ஆசாமியை வெளியே கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் தலைக்கேறிய போதையால் சுயநினைவின்றி இருந்துள்ளார் அந்த போதை ஆசாமி. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காரை மெதுவாக நகர்த்தி சாலையின் ஓரமாக விட்டு சென்றனர். மேலும் மது போதையில் காரை ஓட்டி வந்தவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.