மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 வயது மகன் சாவில் மர்மம்... தாய் மீது பரபரப்பு குற்றச்சாட்டு சொன்ன தந்தை.!
மூன்று வயது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகாரளித்த விவகாரம் சென்னையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சார்ந்த செல்வபிரகாசம் 27 வயதான இவர் லாவண்யா (25) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த தம்பதிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு மாங்காடு விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று வயதில் சர்வேஸ்வரன் என்ற மகன் இருந்தான்.
இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சர்வேஸ்வரன் தாயாரின் பொறுப்பில் வளர்ந்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகனை பார்ப்பதற்காக லாவண்யா வீட்டிற்கு வந்து இருக்கிறார் செல்வபிரகாசம். அப்போது வீடு பூட்டி இருந்திருக்கிறது . லாவண்யா தொடர்பாக விசாரித்த போது அவரது மகன் சர்வேஸ்வரன் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும் அவரது உடலை அடக்கம் செய்து விட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வ பிரகாசம் தனக்குத் தெரியாமல் தன் மகனை அடக்கம் செய்ததால் அவனது சாவில் மர்மம் இருப்பதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் லாவண்யா வேறொரு நபருடன் பழகி வருவதால் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சர்வேஸ்வரன் விளையாடும் போது கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதன் பிறகு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு மறுபடியும் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்திருக்கிறது . எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை பின்னரே தெரிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.