மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல்!.. கட்டம் கட்டி தூக்கிய போலீசார்..!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் மரிபா தலைமையிலான காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
திடீரென வீட்டிற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் வாலிபர் ஒருவரும் 2 பெண்களும் இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர், பிடிபட்ட வாலிபரிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவருடன் இருந்தவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண் என்பதும், மற்றொருவர் விருதுநகரை சேர்ந்த 43 வயது பெண் என்பதும் அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்தூறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர்கள் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்ததும், பின்னர் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஆண்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு அந்த வீட்டிற்கு வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த 20 நாட்களாக ஏராளமான ஆண்கள் அந்த வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.