காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. திடீரென விவசாய நிலத்தில் விழுந்த பெரும் பள்ளம்.. பதறிப்போன விவசாய பணியாளர்கள்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி.!
விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயிக்கு மரண பீதி ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நிம்மியம்பட்டு கூவல்குட்டை பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். முருகேசனுக்கு சொந்தமான நிலம் மலையடிவாரத்தில் இருக்கிறது.
இந்த நிலத்தில் மக்காசோளம் பயிரிட்டுள்ள நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல தண்ணீர் பாய்ச்ச நிலத்திற்கு முருகேசன் சென்றுள்ளார். அந்த சமயத்தில், அதிக சப்தத்துடன் நிலத்தில் 40 அடி ஆழமும், 15 அடி அகலமும் கொண்ட பள்ளம் ஏற்பட்டது.
இதனை முருகேசன், விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த நபர்கள், 100 நாள் பணியாளர்கள் பார்த்து அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து ஆலங்காயம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் தீயணைப்பு துறை அதிகாரிகள், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். கனிம வளத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.