"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணம் விரக்தியில் முடிந்த சோகம்..!!
காதல் திருமணம் செய்து கொண்ட பெண். மூன்று மூன்று வருடங்களாக பெற்றோர் பார்க்க வராத விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியில் வசித்து வரும் பொன்னுசாமி மகன் அருணுக்கும், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த பிறகும் கூட அவருடைய பெற்றோர் வந்து பார்க்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அருண் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது கௌசல்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பூலாம்பட்டி காவல்துறையினர் கௌசல்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.