மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன், மனைவி சண்டையை சமாதானம் செய்ய வந்த நபரால் நிகழ்ந்த விபரீதம்... போலீசார் விசாரணை!!
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரை பகுதியை சேர்ந்தவர் மணி - கோவிந்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் மணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அடிக்கடி கணவர் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
இவ்வாறு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்படும் நேரத்தில் எல்லாம் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளார். இதனையடுத்து சிவக்குமாருக்கும் கோவிந்தம்மாளுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் சிவக்குமார் எங்கு மணி தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்து விடுவாறோ என்ற அச்சத்தில் மணியை கொலை செய்ய எண்ணியுள்ளார்.
அதன்படி மணியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து போதையானதும் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சிவக்குமார். பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் மணியை ஏற்றி சென்று வீட்டில் படுக்க வைத்து விட்டு அளவுக்கு அதிகமான குடியால் மட்டையாகி விட்டதாக கோவிந்தம்மாளிடம் கூறி சென்றுள்ளார் சிவக்குமார்.
நீண்ட நேரம் ஆகியும் மணி எழுந்திருக்காத நிலையில் உறவினர்கள் உதவியுடன் மணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் கோவிந்தம்மாள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சிவகுமாரை பிடித்து விசாரித்த போது தான் உண்மை தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் போலீசார் சிவகுமாரை கைது செய்துள்ளனர்.