பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
இனி நீ அந்த வீட்டுக்கு போகக்கூடாது... ஒரே பெண்ணை காதலித்த வாலிபர்கள்... கடைசியில் நிகழ்ந்த பயங்கரம்!!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் சதிஷ். இவருக்கு திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருவெறும்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரும் சதிஷ்ம் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அதே சமயத்தில் சதிஷின் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் முத்துப்பாண்டிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துப்பாண்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
ஆனால் அதே பெண்ணுடன் சதிஷ்க்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. முத்துப்பாண்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்வதை பார்த்த சதிஷ் இனி அந்த பெண்ணின் வீட்டிற்கு போகக்கூடாது நான் மட்டும் தான் செல்வேன் என எச்சரித்துள்ளார்.
ஆனால் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் முத்துப்பாண்டி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக குத்தி இருக்கிறார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்திருக்கிறார் சதீஷ். அவரை கொலை செய்த கத்தியுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்திருக்கிறார் முத்துப்பாண்டி. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.