மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாயில் ராக்கெட் வைத்து தீபாவளி கொண்டாட்டம்.. வீடியோ வைரல்.!
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் தீபஒளி பண்டிகை வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் சார்பில் மக்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபஒளி என்றாலே காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து மகிழ்வது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இன்றளவில் உள்ள பயமறியா காளைகள் என்று அழைக்கப்படும் இளைஞர் கூட்டம் பல வித்தைகளை காண்பித்து வருகிறது.
சில நேரங்களில் அவர்களின் செயல்பாடுகளால் பட்டாசுகளை கை-கால்களில் வெடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவதும் நடக்கிறது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் வாயில் ராக்கெட்டை திருப்பி வைத்து பட்டாசு வெடித்து மகிழ்கிறார். இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த நபர் தீபாவளி வாழ்த்து என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.