மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தற்கொலை செய்ய வயகராவை சாப்பிட்ட மருமகன்; மாமியாரின் சம்பவத்தால் நடந்த சோகம்..!
சென்னையில் உள்ள சாலிகிராமம், முனுசாமி தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். இவர் சினிமா துறையில் வேலை பார்க்கிறார். தமிழ்ச்செல்வனின் மனைவி பானுமதி. தம்பதிகளுக்கு புவனேஸ்வரி என்ற மகள் இருக்கிறார்.
புவனேஸ்வரிக்கு - மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ராஜசேகர் என்பவருக்கும் கடந்த 2017 ல் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்கள் ஒன்றாக இருக்கையில் வங்கியில் கடன் வாங்கிய நிலையில், அதுகுறித்து புவனேவாரியிடம் கேட்க ராஜசேகர் தனது மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த சமயம் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மாமியாரின் புகாரின் பேரில் ராஜசேகரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று இருந்தனர்.
அந்த சமயம் ராஜசேகர் திடீரென தனது கையை பிளேடால் அறுத்து, வயாகரா உட்பட 10 மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். பின்னர், இதனை அதிகாரிகளிடம் தெரிவித்து காப்பாற்ற கூறியுள்ளார்.
விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி செய்ததை அறிந்து அதிர்ந்துபோன அதிகாரிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.