திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற கொத்தனார் பலி.!
கம்பம், உத்தமபுரம் பகுதியை சேர்ந்த தங்கம் என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் சம்பவத்தன்று கம்பம் காந்தி சாலையில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
அப்போது தங்கம் கம்பம் மெயின்ரோட்டில் அரசமரம் பகுதி அருகில் சென்று கொண்டிருந்தபோது குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து தங்கம் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கம்பம் தெற்கு காவல் துறையினர் விபத்தில் பலியான தங்கம் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.