மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சான்றிதழ் வாங்க 450 கி.மீ பைக்கில் பயணம் செய்த வாலிபர்: தூக்கத்தில் மரத்தில் மோதியதில் பரிதாப பலி..!
கேரளாவில் இருந்து சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நடுத்தர வயதுடையவர் வேப்பூர் அருகே நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், இடுக்கி பகுதியை சேர்ந்தவர் ஜீனோம் ( 41). இவர் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு எம். ஏ பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளா. இதற்கான சான்றிதழை பெறுவதற்காக நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்திற்கு வந்துள்ளார்.
அப்போது விருத்தாசலம்-வேப்பூர் நெடுஞ்சாலையில் விளாங்காட்டூர் பழத்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையோரத்தில் இருந்த புளிய மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த ஜீனோம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜீனோமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், கேரளாவில் இருந்து விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.