#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுழன்றடிக்க காத்திருக்கும் 'மாண்டஸ்' புயல்: 6 மாவட்டங்களுக்கு விரைந்த மீட்பு படையினர்..!
தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் தீவுகளின் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எண்றும் . அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து புயலாக உருவாகக்கூடும் என்பதால் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8 ஆம் தேதி புயலாக மாறும் என்றும், புதுச்சேரி பருதியில் கரையாய் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வைச் சேர்ந்த வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் . திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ,அற்றும் சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் கொண்ட மீட்பு குழு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.