#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடற்படை வீரர்களுடன் கிரிக்கெட் விளையாண்ட புதுமாப்பிள்ளை! பந்து பட்டு சம்பவ இடத்திலேயே பலி!
சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை போர் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த கப்பற்படை வீரர்கள் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். இந்த நிலையில் கப்பலில் பணியாற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோகேந்தர் சிங், விவேக், கமல், விஷ்வா குமார் ஆகியோர் அங்கிருந்த சிலருடன் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஜோகேந்தர் பேட்டிங் செய்துகொண்டிருந்துள்ளார். இந்தநிலையில் எதிர்முனையில் இருந்து விவேக் வீசிய பந்து ஜோகேந்தர் சிங்கின் நெஞ்சில்பட்டுள்ளது. இதனால் பேட்டை கையில் பிடித்தவாறே சுருண்டு விழுந்துள்ளார் ஜோகேந்தர் சிங். இத்னை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நேற்று மாலை 5 மணிக்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இறந்து போன ஜோகிந்தர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவருக்கு கடந்த மே மாதம்தான் திருமணம் நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.