மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துபாயில் இருந்து சென்னை வந்த பயணி மாயம்!. கணவரை காணாமல் தவித்த மனைவியால் ஏர்போர்டில் பரபரப்பு..!
சென்னை, பள்ளிக்கரணை அருகேயுள்ள கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி காவ்யா (30). தம்பதியினர் இருவரும் கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணிகண்டன் துபாயில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்த காவ்யா, தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 19ம் தேதி அதிகாலை துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக தனது மனைவி காவ்யாவுக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கணவரின் வருகைக்காக வீட்டில் காவ்யா காத்திருந்தார். எனினும், அவரது கணவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வந்த காவ்யா, தனது கணவரை தேடியுள்ளார்.
இதன் பின்னர், விமான நிலைய மேலாளரிடம் தனது கணவர் குறித்து புகார் தெரிவித்தார். துபாயில் இருந்து வந்த பயணிகளின் பட்டியலை சரிபார்த்த மேலாளர், விமானத்தில் இருந்து இறங்கிய மணிகண்டன் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டதாக கூறியுள்ளார். காணாமல் போன மணிகண்டனை காவ்யா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கணவர் மாயமானது குறித்து சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் நேற்று காவ்யா புகார் அளித்தார். இந்த புகாரின்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விமானநிலைய வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, காணாமல் போன பயணி மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.