ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நபர்..7 ஆண்டுகள் தலை மறைவு.. திருமண பத்திரிக்கையால் வசமாக போலீஸிடம் சிக்கிய சம்பவம்..!
கடலூரில் கொலை வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த கணேஷ் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் கணேஷின் உறவினர்களிடம் விசாரணையை நடத்தியபோது அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இருப்பினும் போலீசார் அதனை நம்பாமல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் உறவினர் ஒருவரின் திருமண அழைப்பிதழில் கணேஷின் பெயர் இடம் பெற்றிருந்ததை கண்ட போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் கணேஷ் திருப்பதிக்கு தப்பிச்சென்று அங்கு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருப்பதிக்கு விரைந்து சென்ற போலீசார் கணேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.