திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சர்ச்சுக்கு வரும் பெண்களை வாட்சப் குழுவில் இணைத்து காமசேட்டை செய்த பாதிரியார்.. பரபரப்பை தரும் பகீர் தகவல்கள்.!
மதவழிபாட்டு தளத்திற்கு வரும் பெண்களை குறிவைத்து தனது காம இச்சைக்கு பலியாக்கிய பாதிரியாரின் பரபரப்பு செயல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை, பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்ட்ரோ. இவர் அழகிய மண்டபத்தில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றுகிறார். நாம் தமிழர் கட்சியில் முன்பு பொறுப்பில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தின் போது அவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்து லேப்டாப்பை பறித்து சென்றது.
இதுகுறித்து பெனடிக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றாலும், அவரின் பெற்றோர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஆஸ்டின் ஜீனோவை கைது செய்தனர். இதற்கிடையில், பெனடிக் பெண்ணுடன் இருப்பது தொடர்பான ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஆஸ்டின் ஜீனோவின் தாய் அஜித்தா, விடியோவை குறிப்பிட்டு பத்திரியருடன் இருக்கும் பெண் மகனின் தோழி. பாதிரியார் கொடுத்த பாலியல் தொல்லையால், அவர் தற்கொலை முடிவில் இருக்கிறார் என புகார் அளித்துள்ளார்.
விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை புரிந்துகொண்ட அன்ட்ரோ, தனது பாதிரியார் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மேலும், தவறு செய்ய மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஆனால், அஜந்தா பாதிரியாரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என கூறியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் நர்சிங் பயின்று வரும் மாணவி, பாதிரியார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். புகாரில் பாதிரியார் ஆசி வழங்கியபோது தவறாக தொட்டு பேசினார். பின்னர், செல்போன் நம்பரை பெற்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்கிறார்.
முதலில் நல்லவர் போல பேசி, இன்று என் அம்மாவின் மூலமாக என் நம்பரை பெற்று மிரட்டுகிறார். அவர் இளம்பெண்கள், மாணவிகள் போன்றோரை பாலியல் ரீதியாக பலமுறை தொல்லை கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயாரித்துள்ளனர்.
தொடர் புகாரை தொடர்ந்து பாதிரியார் அன்ட்ரோ தலைமறைவாகவே, அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் முதலில் நல்லவர் போல பேசி வாட்சப் குழுவை உருவாக்கியுள்ளார்.
பின்னர், மெல்லமெல்ல காய் நகர்த்தி இரட்டை அர்த்தத்தில் பேசி, தனது வலையில் விழும் பெண்களை நிர்வாண வீடியோ கால் பேசி இருக்கிறார். அதனை விடியோவாக பதிவு செய்து மிரட்டி பிற காரியத்தையும் நடத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அன்ட்ரோ கைது செய்யப்பட்டால் பல பரபரப்பு தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.