மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு அதிகாரிகளை ஓடவிட்ட பிட்புல் நாய்.. விரட்டி விரட்டி கடித்த பரபரப்பு சம்பவம்..!
கிருஷ்ணகிரியில் வெறிநோய் தடுப்பூசி முகாமில் திடீரென வெறிபிடித்த பிட்புல் நாய் ஒன்று அங்கிருந்தவர்களை விரட்டி கடிக்க தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி பிஆர்சி பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஏராளமான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். அப்போது அங்கு அழைத்துவரப்பட்ட பிட்புல் இன நாய் ஒன்று வெறிபிடித்து அங்கிருந்தவர்களை விரட்ட தொடங்கியது. இந்த சம்பவத்தில் அங்கு இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடத் தொடங்கினர்.
இதனையடுத்து நாயின் உரிமையாளர் நாயை கட்டுப்படுத்த முடியாமல் பெல்டால் அந்த நாயை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் நாயின் உரிமையாளர் வெறிபிடித்த தனது பிட்புல் நாயின் மீது தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தி பெல்டில் கட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தால் அந்த முகாமில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.