திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓட்டலின் கதவை திறந்த உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி..போலீஸ் விசாரணை.!
மதுரை மாவட்டம், பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் செஞ்சி அருகே பாலப்பாடி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமார் திருமணம் ஆகாதவர் என்பதால் அவர் வேலை பார்க்கும் ஓட்டலிலே தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று காலை வழக்கம்போல் ஓட்டல் உரிமையாளர் தனது ஓட்டல் கதவை திறந்துள்ளார். அப்போது அங்கு சதீஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக நள்ளான்பிள்ளை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சதீஷ் குமாரின் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.