வீட்டின் ஏசிக்குள் தோலுரித்து,. மஜாவாக வாழ்ந்து வந்த சாரைப்பாம்பு... திடீரென வந்த சத்தத்தால் அதிர்ந்துபோன வீட்டின் உரிமையாளர்..!!



a-shock-for-house-owner-in-cuddalore

வீட்டில் பயன்படுத்தப்பட்ட ஏசிக்குள் புகுந்த சாரைப்பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. பாம்பு தோலுரித்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.

கடலூரில் உள்ள செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த். இவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள ஏசியிலிருந்து பலமான சத்தம் வந்துள்ளது. இதனால் அவர்கள் ஏசி மெக்கானிக்கை அழைத்த நிலையில், அவர் வந்து பார்க்கும்போது ஏசிக்குள் பாம்புதோல் இருந்ததனை கண்ட அதிர்ச்சியடைந்தார். 

இதனால் உடனடியாக பாம்பு பிடி வீரரான செல்லாவை வரவழைத்து ஏசியை கழற்றி பார்த்தபோது, உள்ளே சாரைப்பாம்பு இருந்தது தெரியவரவே செல்லா பாம்பை லாவகமாக பிடித்து அகற்றியுள்ளார். மேலும் ஏசிக்கு வெளியே உள்ள அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப்லைன் அமைக்க போடப்பட்டிருக்கும் ஓட்டை அடைக்காமல் இருந்ததால், பாம்பு உள்ளே புகுந்திருக்கும் என்று செல்லா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வீட்டில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.