மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பால்காரருக்கு ரூட் போட்ட மனைவி.. கண்டித்த கணவனை இரண்டு துண்டாக்கிய அதிர்ச்சி சம்பவம்..!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் மாரியப்பன் - கனகா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் மாரியப்பன் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாரியப்பன் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் தினமும் பால் கொடுத்து வந்துள்ளார். அப்போது கனகாவிற்கும் விக்னேஷ்ர்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. மேலும் இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
ஒரு நாள் கனகாவும் விக்னேஷும் வீட்டில் தனியாக இருப்பதை கண்ட மாரியப்பன் அதிர்ச்சி அடைந்து அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் விக்னேஷ் கனகாவின் வீட்டிற்கு பால் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் கணவன் கண்டித்ததால் தான் விக்னேஷ் தன்னைப் பார்க்க வரவில்லை என்ற கோபத்தில் இருந்த கனகா கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
பின்னர் விக்னேஷை தொடர்பு கொண்ட கனகா தனது கணவர் மாரியப்பனை கொலை செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்ற மாரியப்பன் வீடு திரும்பாததால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மாரியப்பன் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் மாரியப்பனின் மனைவி கனகா தன் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றது அம்பலமானது. மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.