மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாங்க முடியாத கடன் சுமையால் மன உளைச்சல்.. ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை..!
குமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகிலுள்ள வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சின்டோ ராஜ் (34). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஆங்கில பயிற்சி (Spoken English) மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்ததால், பயிற்சி மையம் செயல்படவில்லை. இதன் காரணமாக சின்டோ ராஜ் வருமானமில்லாமல் மிகவும் சிரமத்தில் இருந்து வந்துள்ளார். மேலும், தனது தங்கையின் திருமணத்திற்காக சில லட்சங்கள் கடன் வாங்கியுள்ளார்.
போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்டோ ராஜீக்கு, அவரது மனைவி நிவியா ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சின்டோ ராஜ், கடந்த திங்கட்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த நிவியா வீட்டிற்கு வந்த போது, சின்டோ ராஜ் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கருங்கல் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சின்டோ ராஜீன் வீட்டுக்கு வந்த கருங்கல் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சின்டோ ராஜின் மனைவி நிவியா அளித்த புகாரின் அடிப்படையில், கருங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.