மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் செய்த காரியத்தால் விபரீதம்: காதல் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு கதறிய வாலிபர்..!
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (30). இவரது மனைவி சீதா லட்சுமி (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், குழந்தை இல்லாத காரணத்தால் காதல் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிவகுமார் உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது, சீதா லட்சுமி சமைக்காமல் செல்ஃபோன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிவகுமார் சாப்பிடாமலே மீண்டும் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த சீதா லட்சுமி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை நேரம் முடிந்த பின்பு வீட்டிற்கு வந்த சிவகுமார், தன் காதல் மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர், சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டே ஆவதால் இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.