திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தீராத வயிற்று வலியால் பெண் எடுத்த விபரீத முடிவு..கதறும் உறவினர்கள்.!
செஞ்சி அடுத்த துடுபாக்கம் கிராமத்தில் மாரியப்பன் - ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜேஸ்வரி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் ராஜேஸ்வரிக்கு வயிற்று வலி குறையவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் ராஜேஸ்வரிக்கு வயிற்று வலி அதிகமானதால் அவர் மனமுடைந்து வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரியின் கணவர் உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து ராஜேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து செஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வயிற்று வலியால் பெண் பூச்சி மருந்து குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.