திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பல ஆண்களுடன் செல்போன் பேச்சு... கத்திரிக்கோளால் குத்தி குத்தி... கள்ளக்காதலனின் வெறி செயல்.!
தனது காதலி பல பேருடன் செல்போனில் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அவரை கத்திரிக்கோலால் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்தவர் மதுரை வீரன். இவர் குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் வசித்து வந்தார். இவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரது மனைவி இவரைப் பிரிந்து தனது மகன்களுடன் பெற்றோரின் ஊரான தேனிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மதுரை வீரனுக்கும் தேனியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணிற்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தனி வீட்டில் கணவன் மனைவி போல் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது மதுரை வீரன் வீட்டிலில்லாத நேரத்தில் வேறு ஆண்களுடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார் சித்ரா. இதனை மதுரை வீரன் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.
சம்பவத்தன்று இதனால் ஆத்திரம் அடைந்த மாதிரி வீரன் தான் வைத்திருந்த கத்திரிக்கோலால் சித்ராவை உடலின் பல இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்திருக்கிறார். அவர் இறந்ததும் வீட்டை வெளி பக்கமாக பூட்டிவிட்டு தப்பிச் சென்ற அவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.