காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
"கோவில் கருவறைக்குள் ஒலிக்க போகும் மகளிர் குரல்" செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்!!
காலங்காலமாகவே கோவில் என்றால் அதற்கு அர்ச்சகர்கள் பிராமணர்களாக தான் இருந்தனர். தற்போது வரை அதுவே நடைமுறையில் உள்ளது. பிற சாதியினர் கருவறைக்கு செல்லக்கூடாது என்று கட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அவிழ்த்துள்ளார்.
அதாவது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று பெரியார் காலம் தொட்டு பேசப்பட்டு வருகின்றது. தற்போது அதனை முதலமைச்சர் அவர்கள் நிரூபித்து காட்டியுள்ளார். இது குறித்து அவர் அதிகாரபூர்வ X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்" என்று அவர் கூறியுள்ளார்.
பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
— M.K.Stalin (@mkstalin) September 14, 2023
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த… https://t.co/U1JgDIoSxb