மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் பெண்ணுக்கு எதிர்பாராத நேரத்தில் கட்டாய தாலிகட்டிய இளைஞன்?.. பகீர் வீடியோ வைரல்.!
மேலைநாட்டுக்கலாச்சார ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு இன்மை, திரைத்துறை மோகத்தினால் இன்றளவில் பல சீரழிவுகள் நடந்து வருகின்றன. பதின்ம வயதை கூட எட்டாத சிறார்கள் திருமணம், பலாத்காரம் என பல்வேறு கொடூரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
காதல் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதும், நம்பவைத்து அவர்களை ஏமாற்றுவதும் என பல துயரங்கள் நடந்து வந்தாலும், சில பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லாத வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், "திருமணம் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் மணமக்களின் தாலி கட்டும் நேரத்திற்காக காத்திருக்க, இளம்பெண்ணின் பின்னால் இருக்கும் இளைஞர், மணமக்கள் தாலி கட்ட கெட்டிமேளம் வாசிக்கும் போது, தனக்கு முன்னால் அமர்ந்துகொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் தாலி போன்ற ஆபரணத்தை போட்டு முடிச்சி போடுகிறார்.
இந்த நிகழ்வுகளை அவருடன் வந்திருந்த நண்பர்கள் திட்டமிட்டு பதிவு செய்ததாக தெரியவருகிறது. பெண்ணும் எந்த எதிர்ப்பும் காண்பிக்காமல் அமைதியாக இருப்பது போன்ற நிகழ்வுடன் வீடியோ முடிவடைகிறது". இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.