திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கேன்சர் நோயால் அவதியுற்ற இளைஞர்.. சிகிச்சைக்கு சென்ற இடத்தில் தற்கொலை.. சென்னை அருகே பரபரப்பு.!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் சின்னா. இவருக்கு தொண்டையில் கேன்சர் நோய் ஏற்பட்டு கடந்த நவம்பர் 1ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் சின்னா ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த கேன்சர் நோயினால் கடும் அவதியுற்ற சின்னா மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இவரது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த சூழலில் சின்னா ஸ்டான்லி மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சின்னா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சின்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.