மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை பயன்படுத்தி சிறுமியிடம் 65 சவரன் நகைகளை ஆட்டையை போட்டு உல்லாசம் அனிபவித்த வாலிபர்..!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்த 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், இருவரும் நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். சிறுமியுடனான காதலை பயன்படுத்தி சதீஷ்குமார் அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார். இப்படி கிட்டத்தட்ட 65 சவரன் நகையை சிறுமி சதீஷ்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இது குறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டத்தில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக் கொண்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.