திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரயில் பயணத்தில் அட்ராசிட்டி சேட்டை.. சிக்னல் கம்பத்தில் சிக்கி சுக்குநூறான இளைஞன்., பதைபதைப்பு வீடியோ வைரல்.!
இளைஞன் ஒருவன் இரயில் பயணத்தின் போது சாகசம் செய்து உயிரைவிட்ட பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மனிதனின் பரிணாம வளர்ச்சி தொங்கியதில் இருந்து அவனின் குணங்களும், செயல்பாடுகளும் மனிதருக்கு மனிதர் வேறுபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. குரங்கில் இருந்து மனிதன் உருவனான் என்பதற்கேற்ப, நம்மவர்கள் செய்யும் குரங்கு சேட்டைகளுக்கு அளவுகள் இல்லை. இவை சில நேரங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.
தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோ எங்கு எப்போது? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஒருநிமிட நீளம் கொண்ட வீடியோவில் இளைஞன் இரயில் பயணம் மேற்கொள்கிறான். அவன் கதவோரம் நின்று பயணம் செய்துகொண்டு இருக்கிறான்.
அப்போது, கை-கால்களை வைத்து அமைதியாக பயணம் செய்யாமல், இரயில் சமிக்கை கம்பிகள் வரும் போது அதனை தொடுவது போன்றும், உடலை வெளியே நீட்டி பின் உள்ளிழுத்து தப்பிப்பது போன்றும் பாவனை செய்து வருகிறான். இவ்வாறாக இளைஞன் ஒவ்வொரு இடத்திலும் தப்பித்து வருகிறான்.
ஆனால், இரயில் அங்கிருந்த இரயில் நிலையம் அருகே சென்றபோது, சமிக்கை கம்பியில் இளைஞன் அடிபட்டு சுருண்டு கீழே விழுகிறான். இந்த சம்பவத்தை இரயிலில் பயணம் செய்த மற்றொரு பயணி எதற்ச்சையாக கவனித்து வீடியோ எடுக்கும் போதே விபத்து நடக்கிறது. இரயிலோ, பேருந்தோ நாம் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என்பதே நமது உயிரை பாதுகாக்கும்.