காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கார் விற்பனை விவகாரத்தில் 4 பேரால் இளைஞர் அடித்தே கொலை; நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
நண்பர்களாக கார் விற்பனையில் ஈடுபட்டவர்கள், முன்விரோத பிரச்சனையில் இளைஞரை அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி, சோமையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிரஞ்சீவி (வயது 26). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்வது, அடகு வைப்பது போன்ற தொழிலை செய்து வந்துள்ளார். சௌரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 39). நண்பர்களான இவர்கள் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அஸ்வினிடம் நபரொருவர் காரை கொடுத்து பணம் கேட்டுள்ளார். அஸ்வினும் காரை வாங்கி சிரஞ்சீவி என்ற நபருக்கு கொடுத்துள்ளார். சிரஞ்சீவி ரூ.3 இலட்சத்திற்கு காரை விற்பனை செய்துள்ளார். இதற்கிடையே அஸ்வினிடம் காரை கொடுத்தவர் மீண்டும் காரை கேட்டுள்ளார்.
அஸ்வினும் சிரஞ்சீவியை சந்தித்து காரை கேட்க, அவர் காரை விற்பனை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வின், நான் உன்னிடம் அடகு வைக்கத்தான் கொடுத்தேன், நீ எதற்காக விற்பனை செய்துள்ளாய்? என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாலும், முன்விரோதத்துடன் செயல்பட்டுள்ளனர். காரை கொடுத்தவர் தொடர்ந்து காரை கேட்க, மன உளைச்சலுக்கு உள்ளவர் கார் விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டை வி.எம் சத்திரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), நாங்குநேரி முத்தையா (வயது 33), வெட்டப்பட்டு ஆனந்த்பாபு (வயது 49) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இதில் கண்ணன் ஓட்டுநர், முத்தையா வழக்கறிஞர், ஆனந்த பாபு பழைய கார்களை விற்பனை செய்யும் நபராவார். அஸ்வினின் புலம்பலை கேட்ட நண்பர்கள், சிரஞ்சீவியை வரச்சொல் பேசலாம் என கூறியுள்ளார் கடந்த 22ம் தேதி அஸ்வின் சிரஞ்சீவியை மருதமலை சாலைக்கு அழைத்துள்ளார்.
அங்கு அஸ்வின் தனது நண்பர்களோடு இருக்க, கார் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது அஸ்வினின் நண்பர்கள் சிரஞ்சீவியை அடித்து நொறுக்கியுள்ளனர். படுகாயமடைந்த சிரஞ்சீவி மயங்கி விழ, 4 பேர் கும்பல் அப்படியே அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டது.
மறுநாள் காலை நேரத்தில் அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய சிரஞ்சீவியை மீட்டு சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். இந்த தகவலை அறிந்த சிரஞ்சீவியின் தந்தை நேரில் வந்து பார்த்துவிட்டு, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் அஸ்வின் உட்பட 4 பேரின் மீது வழக்குப்பதிந்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிடவே, காவல் துறையினர் அஸ்வின், கண்ணன், முத்தையா, ஆனந்த பாபு ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.